பரபரக்கும் இள வயதில்
களவறியா உன் மனம்
உண்மையான நண்பன் என்று
போதை அரக்கனை ஏன் நாடியது
இளைஞனே இளமையின் கனவில்
இனிய ராகம் பாடவேண்டிய நீ
இரத்தம் குடிக்கும் ஹெரோயினையா
கைகளில் வருடுகிறாய்
காதலை துறந்து போதைக்கு
அடிமை ஆகி வேதனையின்
விளிம்பில் நின்றா சாதனை
செய்ய பார்க்கிறாய்
காசை கரியாக்கி
காயத்தை சருகாக்கி
உயிருக்கு உலை வைக்கவா
இந்த ஊதாரித்தனம்
Tuesday, October 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment